• May 05 2024

நானே வருவேன் திரைப்படத்தின் இந்த பணிகள் முடிவடைந்து விட்டதாம்- யுவன் கொடுத்த முக்கிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

செல்வராகவன் – தனுஷ் – ஐந்தாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாகும் திரைப்படம் தான் நானே வருவேன்.இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கின்றார்.அப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் 2 மணி நேரம்  தான் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக  இருக்கும் எனவும், ரசிகர்கள் சலிக்காமல் உட்கார்ந்து பாம் பார்க்க ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.


இந்த  நிலையில்,  நானே வருவேன் படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை  நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.


இந்த நிலையில், நானே வருவேன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள யுவன்,  இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,   நானே வருவேன் திரைப்படத்திற்கு ஆ.ஆர். எனப்படும் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை முடித்துள்ளதாக தெரிவித்துள்ள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement