• Mar 15 2025

புஷ்பா 2_வுக்காக உயிர்கொடுத்த பெண் ரசிகை .. அல்லு அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சர்வதேச அளவில் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் முதலாவது நாளில் 294 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

புஷ்பா 2 படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வந்தாலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். இந்தப் படம் இந்த வார இறுதிக்குள் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புஷ்பா 2படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணையும் என கூறப்பட்டது. இதன் பிரீமியர் ஷோ நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் நடத்தப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் தியேட்டருக்கு வந்திருந்தார்கள். அத்துடன் அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவும் இந்த படத்தை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்.


இதன்போது படத்தை பார்ப்பதை காட்டிலும் ராஷ்மிகாவையும் அல்லு அர்ஜுனையும் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதன்போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதான பெண்னொறுவர் உயிர் இழந்ததோடு அவருடைய ஒன்பது வயதான மகன் சுயநினைவின்றி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், புஷ்பா 2 படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில்  சிக்கி உயிரிழந்த பெண்ணுக்கு அல்லு அர்ஜுன் தனது அனுதாபத்தை தெரிவித்ததோடு அவருடைய குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி  வழங்குவதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement