• May 05 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நபர்.... மீண்டும் வைல்ட்கார்ட் என்றியாகவா...வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வது குறித்து பேசியுள்ளார்.

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோக்கள் ரசிகர்களிடத்தே மிகவும் வைரலாகியது.  டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். மேலும் அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை.

எனினும் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள்  பங்கேற்றனர்.

மேலும் இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி மற்றும் ராம் ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.அத்தோடு  கடந்த வாரம் ஜனனி வெளியேறினார்.

இவ்வாறுஇருக்கையில்  விஜய் டிவியின் புதிய சேனலான விஜய் டக்கர் சேனலின் நிகழ்வில் கலந்து கொண்ட ஜி. பி. முத்து பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 

அதில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு மூலம் செல்வீர்களா? என  அதில் கேள்வி கேட்கப்பட்டது. எனினும் இதற்கு பதிலளித்த முத்து, "கண்டிப்பாக அப்படி கூப்பிட்டா.. இதுவரை கூப்பிடலை, கூப்பிட்டா பாப்போம்" என ஜி‌‌.பி. முத்து பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement