• Jun 02 2024

அண்ணிக்காக கொலைப் பழியை ஏற்ற வெற்றி.. அபி எடுத்த அதிரடி முடிவு.. எதிர்பாராத திருப்பத்துடன் வெளிவந்த ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மக்கள் மனம் கவர்ந்து சீரியல்களில் ஒன்றாக 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல் விளங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக வெற்றி-அபி ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பும் ஜோடியாகவே இருந்து வருகின்றது. ஆரம்பத்திலிருந்தே இந்த சீரியலில் பல அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன.


அந்தவகையில் இந்த சீரியலின் படி பவானியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெற்றி பெயில் கிடைத்து வெளியே வந்துவிட்டார். இருப்பினும் குற்றவாளி யார் என்பதை தெரிந்துகொள்ள தனது தேடுதல் பணியைத் தொடங்கிய இவருக்கு, பின்பு சில தடயங்களைப் பற்றி கேள்விப் பட்ட உடனே உறுதியாகத் தெரிய வருகிறது தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் அதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்று. 

இதில் வெற்றிக்கு கலை மீது தான் சந்தேகம் எழுகிறது. அதைப் பற்றிய பேச்சு வார்த்தை நடக்கும் போது, நந்தினி கத்தியை கொண்டு செல்வதை வெற்றி உடனே கண்டு பிடித்து விடுகின்றார். எதனால் இப்படி செய்தீர்கள் என்று கேட்கும் போது, பவானி கலையை அடித்து துன்புறுத்திய போது அவர் மிகவும் மன வேதனையில் இருந்தார். அதனால் தான் இப்படி செய்தேன் என்று கூறுகிறார் இவ்வாறாக பல திருப்பங்கள் நிறைந்த வண்ணம் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.


இதற்கு பின்னர் வெற்றி என்ன செய்யப்போகிறான், அண்ணிக்காக கொலை பழியை ஏற்றுக்கொள்வான் அல்லது இது உண்மை இல்லை என்று மீண்டும் கொலையாளியை தேடுவானா..? என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 

அதில் அண்ணிக்காக கொலை பழியை ஏற்றுக்கொண்டு தான் ஜெயிலிற்கு செல்கின்றார் வெற்றி. அதுமட்டுமல்லாது நீதிமன்றத்தினால் வெற்றிக்கு 6ஆண்டுகால கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அண்ணியும், அபியும் அழுகின்றனர். 

பின்னர் ஜெயிலிற்கு அவரைப் பார்க்க வந்த அண்ணியிடம்  "அபி என்ன முடிவு எடுத்திருக்கிறார்" என வெற்றி கேட்கின்றார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் நந்தினி அழுகின்றார். அதேநேரத்தில் அபியோ அந்த வீட்டை விட்டு பேக்குடன் அழுத வண்ணம் பஸ்ஸில் பயணிக்கின்றார்.  இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement