• Jan 19 2025

லைவ் ஸ்டிரீமில் ஆர் ஆர் வீரரின் உண்மை முகம் அம்பலம் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

இந்தாண்டின் ஐ.பி.எல் தொடர் வெகு கோலகமாக ஆரம்பித்து கடந்த 26 ஆம் திகதி கே.கே.ஆர் மற்றும் எஸ்.ஆர்.எச் அணிகள் பைனலில் மோதி கே.கே.ஆர்  அணி எஸ்.ஆர்.எச் ஐ 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளில் பல இளம் வீரர்கள் தமக்கான அடையாளத்தை நிலைநாட்டியிருந்தனர்.


அப்படியொரு வீரர்தான் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்.ஆர் ஆர் அணிக்காக விளையாடிய ரியான் பராக் 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 573 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் ரியான் பராக் நிறைவு செய்துள்ளார்.


இந்த நிலையில் ரியான் பராக் நேற்று யூட்யூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்திருக்கிறார். அப்போது சில பதிப்புரிமை இசையை யூ-ட்யூபில் தேடிய போது, அவர் திரையை மறைக்க மறந்துவிட்டார். அப்போது அவரது தேடல் ஹிஸ்ட்ரியில் பாலிவுட் நடிகைகளான அனன்யா பாண்டே ஹாட், சாரா அலி கான் ஹாட் என்று வெளிப்படையாக தெரிய வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement