• Mar 27 2023

பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு நேர்ந்த சோகம்.. பிறந்த அழகிய ஆண் குழந்தை உயிரிழப்பு.. காரணம் வைத்தியர்களா..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

நாட்டுப்புற பாடல்கள் பாடி அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபல்யமானவர் பேமஸ் ஆனவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் பாடகியான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனக்குப் பிறந்த ஆண் குழந்தை குறித்த தகவலை கூறியுள்ளார் பாடகி அனிதா குப்புசாமி. அதாவது "எனக்கு முதலில் பல்லவி என்கிற பெண் குழந்தை பிறந்துவிட்டார். இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்று, அடிக்கடி சாமியிடம் நான் வேண்டிக்கொள்வேன். 


இதனையடுத்து இரண்டாவது குழந்தையாக எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை ரொம்ப அழகாக இருந்தது. கலர்னா கலரு அப்படி ஒரு கலரு. ஆனால் சிசேரியன் செய்து தான் அந்த குழந்தை பிறந்தது. இருப்பினும் பிறந்த 24 மணிநேரத்துக்குள்ளேயே அந்த குழந்தை இறந்துவிட்டது. 


அதாவது மருத்துவர்கள் தவறான ஊசி போட்டதால் நெஞ்செல்லாம் எரிஞ்சி, அந்த குழந்தை திடீரென இறந்துவிட்டது" என கண்கலங்கியபடி அப்பேட்டியில் தெரிவித்தார் அனிதா. அதுமட்டுமல்லாது தான் கடவுளிடம் இன்னொரு குழந்தை வேண்டும் என வேண்டி கேட்டுக் கொண்டதால் தனக்கு அம்பாள் இரண்டாவதாக அழகான பெண் குழந்தையை கொடுத்ததாகவும் கூறியுள்ளார் அனிதா.


அனிதா-குப்புசாமி தம்பதியினரின் குழந்தை பிறந்ததும் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர்களுக்கு தமது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement