• May 05 2024

வெளியானது 'ஆர்.சி.15' படத்தின் டைட்டில்.. அடேங்கப்பா தலைப்பே இப்படி மாஸ் ஆக இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருவது வழமை. அந்தவகையில் இவரின் இயக்கத்தில் ராம்சரண் தற்போது நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தை தற்காலிகமாக 'ஆர்.சி.15' என அழைத்து வந்தனர். 

மேலும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிப்பதோடு இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பிரமாண்டமாக தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாது இப்படத்தின் படப்பிடிப்புகளும் மும்முரமாக இடம்பெறுகின்றது.


இந்நிலையில் ராம்சரணின் பிறந்தநாளான இன்றைய தினம் ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் வகையில் ஆர்.சி.15 படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்தவகையில் இப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என பெயரிட்டு உள்ளனர். 


அத்தோடு முன்னதாக இப்படத்திற்கு 'சிஇஓ' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், இதை பொய் என நிரூபிக்கும் வகையில் 'கேம் சேஞ்சர்' என பெயரிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.


Advertisement

Advertisement

Advertisement