• Sep 25 2023

கவினின் திருமணத்தில் கலந்து கொண்ட மூன்று முக்கிய இயக்குநர்கள்- அடடே.... இவங்களும் போயிருக்கிறாங்களா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக அறிமுகம் ஆன போதே கவினுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகைகளாக மாறினர். அதன் பின்னர் அந்த சீரியலில் ஹீரோவாகவே கவின் மாறினார்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இதன் பின்னர் படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன. அதன்படி இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட்,டாடா போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.இவர் தனது நீண்ட நள் தோழியான மோனிகா என்பவரைக் கரம் பிடித்தார்.


இவர்களின் திருமணத்தில் விஜய் டிவி புகழ் பங்கு கொண்டு பூங்கொத்து வழங்கியிருந்தார்.இவரின் திருமண புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தன.


இப்படியான நிலையில் இவரது திருமணத்திற்கு இயக்குநர் நெல்சனும் மனைவியும், இயக்குநர் விக்னேஷ் சிவன், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகை ப்ரியங்கா மோகன் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும புகைப்படமும் வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement