• May 09 2024

ஹிப்ஹாப் ஆதிக்கு வந்த சோதனை..படுதோல்வி அடைந்த வீரன்..தியேட்டரில் படம் பார்க்க ஆளே இல்லாத அவலம்...!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

ஹிப்பாப் ஆதி நடித்த வீரன் படத்தை பார்க்க திரையரங்கிற்கு ஆட்கள் வராததால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் வீரன் படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆதிராராஜ், வில்லனாக வினய் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டன ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்து நடித்தும் உள்ளார். இந்த படம் வெளியானதில் இருந்து படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் வந்தன. 

மின்னல் முரளி திரைப்படம் குழந்தைகளுக்கு பிடித்தது போல, அதே கதைக்களத்தை கொண்ட வீரன் திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியான 6 நாட்களிலேயே தியேட்டரில் ஆட்களே இல்லை.

இப்படத்துக்காக சுமார் ரூ.8 கோடியைக் கொடுத்திருக்கும் விநியோகஸ்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நஷ்டமீதிப் பணம் தயாரிப்பு நிறுவனத்தால் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும் என்றாலும் இலாபம் வரும் என்று நினைத்த படம் வட்டி, நஷ்டத்தைக் கொடுத்துவிட்டதே என்ற வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement