• May 18 2024

மாணவர்களை சந்திக்கவுள்ள விஜய்... இடம், தேதி இதுதான்... வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . மேலும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.


இவ்வாறு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் குறித்து அடிக்கடி அரசியல் குறித்த தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் எனக் கூறப்படுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் சில அரசியல் சார்ந்த விஷயங்களையும் அவர் சமீபகாலமாக தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் தீவிரமாக செய்து வருகிறார்.

அந்த வரிசையில் 10, 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து விஜய் பேச இருப்பதாகவும், அவர்களுக்கு பரிசுகள் மற்றும் நன்கொடைகள் வழங்கி கௌரவிக்க இருப்பதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் தற்போது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் "வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள "RK Convention Centre-ல்" 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய்  மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அன்றைய தினம் விஜய் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவும் முடிவு செய்திருப்பதாகவும், அத்தோடு விஜய் மக்கள் இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளையும்  அன்றைய தினம் சந்தித்து அவர்களையும் மாணவர்களோடு இணைந்து கௌரவப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


மேலும் அரங்கத்திற்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு அங்கீகார அட்டைகள் வழங்கப்படும் எனவும், அதிலும் குறிப்பாக மாணவ மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

Advertisement

Advertisement