• May 04 2024

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் படத்தின் டீசர் ரிலீஸ் ஆகிடுச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் 'கார்த்தி' நடிப்பில், சமீபத்தில் வெளியான 'விருமன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கார்த்தியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளைய தினம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் மற்ற கதாபாத்திங்களை விட கார்த்தியின் வேடம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் உள்ளதாக, வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரான உமர் சந்து தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள, 'சர்தார்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகவும் வித்தியாசமானதாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வேற லெவலுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்தி இந்த படத்தில் 6 தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement