• May 18 2024

சிவகார்த்திகேயின் புதிய படத்திலிருந்து நாளைய தினம் புதிய அப்டேட்டை வெளியிடவுள்ள படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அயலான் பிரின்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். அதில் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் ஆனது அவ்வப் போது வெளியாவதைக் காணலாம்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 22வது திரைப்படத்தின் அப்டேட் நாளை காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

நாளை காலை 10.10 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு மாவீரன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது

சிவகார்த்திகேயன், மிஷ்கின் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை மடோனா அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே யோகி பாபு நடித்த மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement