• May 03 2024

பிரபல நடிகர் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

1990 களின் துப்பறியும் தொலைக்காட்சி தொடரான 'கிராக்கர்' என்ற தொடர் மூலம் புகழ் பெற்றவர்  ராபி கோல்ட்ரேன். அந்த தொடரில் நடித்தற்காக அவர் மூன்று முறை பிரிட்டிஷ் அகாடமி தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்று சாதனை படைத்திருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது நடிகர் ஜேம்ஸ் பாண்ட்டின் படங்களான 'கோல்டன் ஐ' மற்றும் 'தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப்' ஆகியவற்றிலும் ஜேம்ஸ் பாண்டுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கோல்ட்ரேன், டேனியல் ராட்க்ளிஃப், எம்மா வாட்சன் மற்றும் ரூபர்ட் கிரின்ட் ஆகியோருடன் இணைந்து எட்டு 'ஹாரி பாட்டர்' படங்களிலும் ராட்சத ரூபியஸ் காரெக்டராக நடித்து பிரபலமானார்.


இந்நிலையில் ஹாரி பாட்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒருவரே ராபி கோல்ட்ரேன். நேற்றிரவு காலமானார். இதனை அவரின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர். 

அதாவது நடிகர் ராபி கோல்ட்ரேன் ஸ்காட்லாந்தில் உள்ள ஃபால்கிர்க் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது.


இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் 'ஹாரி பாட்டர்' எழுத்தாளர் ஜேகே ரவுலிங்கும் ராபி கோல்ட்ரேன் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது "ராபியைப் போல ஒரு சிறந்த மனிதரை இதுவரை நான் பார்த்தது இல்லை.

அவர் ஒரு நம்பமுடியாத திறமைக்கு சொந்தக்காரர். அவரை அறிந்துகொள்ளவும், அவருடன் பணிபுரியவும் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கணும். அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி.. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது குழந்தைகளிற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement