• May 12 2024

லாஸ்லியாவை தொடர்ந்து பிக்பாஸ் 6ல் களமிறங்கவிருக்கும் இலங்கைப் போட்டியாளர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி தான்  பிக் பாஸ். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் நிறைவுபெற்றுள்ளது.

அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட்டால், அதில் தொகுப்பாளராக கமல்ஹாசன் வருவாரா? சிம்பு வருவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில், 6-வது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதனை பிக் பாஸ் ப்ரோமோ மூலம் அறிந்து  கொள்ள முடிந்தது.



 இந்நிகழ்ச்சியின் 6 வது சீசன் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை  ஆரம்பமாகவுள்ளது. இந்தவரும் புதுவிதமாக பிரபலங்களை தவிர்த்து 4 பேர் பொதுமக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அவர்களை தொடர்ந்து யார் யார் போட்டியாளர்களாக களமிரங்கவுள்ளனர் என்ற லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் எப்படி இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா அறிமுகமாகினாரோ,

அதேபோல் இலங்கையை சேர்ந்து ஒரு போட்டியாளரை பிக்பாஸ் 6ல் இறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாம். அதற்கான ஆடிஷனும் சமீபத்தில் நடைபெற்றுள்ளதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement