• May 03 2024

எதிர் நீச்சல் சீரியலில் வில்லனாக களமிறங்கிய இலங்கை நடிகர்.! யார் தெரியுமா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் ரசிகர்களின் மனதை கவர்ந்து டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்றாகும்.பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலுக்கு ரசிகர் கூட்டமும் அதிகமாகவே இருக்கின்றது.


எதிர்நீச்சல் முக்கிய கதாபாத்திரம் ஆதிகுணசேகரன் பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறந்ததன் பின்னர் குறித்த சீரியல்  சுவாரஷ்யம் இல்லாததாகவே இருந்தது. பின்னர் தற்போது ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது இந்நிலையில் புதிதாக இன்னொரு வில்லன் களமிறங்கியிருக்கின்றார்


நெற்றியில் திருநீறு, வெள்ளை வேஷ்டி சட்டை, தோளில் ஒரு பேக் என பவ்யமாக இருந்தாலும் பேச்சில் தான் ஒரு வில்லன் என்பதை முதல் நாளே மிரட்டியுள்ளார்.இவர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


இலங்கை மட்டக்களப்பு பகுதியை சேர்நதவர். நடிகர், இயக்குனர், தொகுப்பாளர் என வலம்வரும் இவர், முதன்முறையாக இலங்கையில் சக்தி தொலைக்காட்சி  ஒன்றில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது இயக்குனர் திருச்செல்வம் மூலமாக கிருஷ்ணப்ப சுவாமி மெய்யப்பன் கிருஷ்ணாவாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement