• May 03 2024

அவர்கள் முகத்தில் உள்ள புன்னகை விலைமதிப்பற்றது!- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஸ்பெஷல் கிப்டுக்களை வழங்கிய சித்தி இத்னானி

stella / 10 months ago

Advertisement

Listen News!


சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இப்படத்தில் பாவை என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் சித்தி. தன் கண்ணக்குழி அழகால் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் .


தற்போது நடிகை சித்தி இத்னானி நடிப்பில் நூறுகோடி வானவில் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களை இயக்கிய சசி தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சித்தி இத்னானி. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.


இதுதவிர  இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் சித்தி இத்னானி. இப்படத்தில் அவர் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.


இப்படி தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சித்தி இத்னானிக்கு இன்ஸ்டாகிராமிலும் கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சித்தி இத்னானி.


அந்த வகையில் தற்போது மாற்றுத் திறனாளி குழந்தைகளை நேரில் சந்தித்து பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement