விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வந்து பழனிச்சாமிக்கு ஸ்வீட் கொடுத்து நீங்க கொடுத்த ஐடியா சூப்பரா ஒர்கவுட் ஆயிடுச்சு அத்தை காலேஜ் போக சம்மதிப்பாங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சம்மதம் சொன்னது இல்லாம அவங்க பேட்டியும் கொடுத்திருக்காங்க என்று சொல்லி வீடியோ காட்ட பழனிச்சாமி சந்தோஷப்படுகிறார்.
இன்னொரு பக்கம் கேன்டினில் எல்லோரும் பாக்யா பேசிய பேட்டி வீடியோவை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்து அங்கு வரும் ராதிகா இங்கே என்ன சத்தம் கேட்டதற்கு சிரிச்சிட்டு இருக்கீங்க வேலை பார்க்க வேண்டியது தானே என்று திட்டி போய் வேலையை பாருங்க என்று சொல்லிக் கிளம்ப செல்வி வாண்டடாக கூப்பிட்டு பாக்யா பேசிய வீடியோவை காட்டி ராதிகாவை வெறுப்பேற்றி அனுப்பி வைக்கிறார்.
அடுத்து காலேஜ் முடித்து வீட்டுக்கு வரும் பாக்கியா இன்னைக்கு காலேஜ் முழுக்க உங்கள பத்தி தான் பேச்சு என்று ஈஸ்வரிடம் சொல்லி இன்னும் ஐஸ் வைக்க எழிலும் நான் கூட அம்மாவ பாக்க காலேஜ் போயிருந்தேன் என்னை எல்லாரும் இப்ப ஈஸ்வரோட பேரன் தானே என்று கேட்கிறார்கள் என்று சொல்ல அசோசியேசன் குரூப்ல உங்களோட பேட்டி வீடியோ போட்டேன் இப்போ நீங்க இந்த ஏரியா முழுக்க பேமஸ் ஆகிட்டீங்க என்று பாக்கியா இன்னும் ஐஸ் வைக்கிறார்.
அடுத்து பாக்கியா அத்தை எனக்கு இன்னொரு உதவி பண்ணனும் நீங்களும் நானும் கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்லி அழைக்க தியானம் பண்ணனும் என்று சொல்ல கோவிலில் போய் கூட தியானம் பண்ணலாம் என்று பாக்கியா அழைக்க ஈஸ்வரி வர சம்மதிக்கிறார்.
அதைத்தொடர்ந்து கோபி பாரில் உட்கார்ந்து நண்பருடன் சரக்கடித்துக் கொண்டிருக்க அப்போது ராதிகா போன் செய்து எங்க இருக்கீங்க என்று விசாரித்து விட்டு உங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் பாருங்க என்று சொல்கிறார்.
பாக்யா மாமியார் பற்றி பேசிய வீடியோ தான் அது இதை பார்த்து கோபி கடுப்பாகிறார். மேலும் இவை ஏதோ பிளான் பண்றான் ஆனா எங்க அம்மா அம்மன் மாதிரி அவ்வளவு சீக்கிரம் எவ்வளவு வலையில் எல்லாம் விழ மாட்டாங்க என்று வீராப்பு வசனம் பேசுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஈஸ்வரி பேசிய பேட்டி வீடியோ வர அதை பார்த்த கோபி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இப்போ எங்க அம்மாவும் கட்சி மாறிவிட்டார்கள் என புலம்புகிறார். பிறகு கோபி நான் வீட்டுக்கு கிளம்புறேன் என அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
மறுபக்கம் பாக்யாவும் ஈஸ்வரியும் கோவிலுக்கு நடந்து செல்ல அப்போது எல்லோரும் வந்து ஈஸ்வரியை பாராட்ட அவர் பாக்கியா நான் காலேஜ் போகவில்லை என்று தான் சொன்னான் நான் தான் நீ கண்டிப்பா போய் படிக்கணும்னு சொன்னேன் என்று புது டிராமா போட பாக்யா வாயடைத்து நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Listen News!