• May 11 2024

தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பும் ஆரம்பம்- இந்த முறை எங்கு ஷுட்டிங் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இப்படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் . முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம் , யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் பூஜையுடன் ஆரம்பித்தது. தொடர்ந்து ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது. சில நாட்கள் ஓய்வு கொடுத்த நிலையில் இன்று(ஜூன் 3) முதல் சென்னையில் விஜய் 66 படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் கலந்த முழு நீள கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement