• May 11 2024

விஜயுடன் நான்காவது தடவையாக ஜோடி சேரப்போகும் பிரபல நடிகை-லோகேஷ் வைத்த வைத்த ருவிஸ்ட்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடச்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய்.

இவர் தற்போது தளபதி-66 ல் நடித்து வருகின்றார்.அப்படம் முடியும் முன்பே தளபதி 67 படம் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி சேர்ந்திருக்கிறார். லோகேஷின் விக்ரம் படம் இன்று ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது. அடுத்து விஜய் 67 படத்திற்கான முதற்கட்ட பணிகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார் எனும் தகவல் கசிந்துள்ளது.

ஷூட்டிங் இந்த வருடத்தின் இறுதியில் தொடங்குமென தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சமந்தா விஜய் உடன் தெறி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். தற்போது நான்காவது முறையாக விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

லோகேஷின் முந்தைய படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருந்ததில்லை, ஆனால் தற்போது சமந்தா தளபதி 67ல் நடிப்பதால் அவருக்கு முக்கியத்துவம் நிச்சயம் இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement