• Sep 27 2023

லியோ படத்தின் நான் ரெடி தான் பாடலிலிருந்து முக்கிய வரிகள் நீக்கம்- படத்திற்கு ஏற்பட்ட புதிய சோதனை

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம்  அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்தது. இதனால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அத்தோடு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ படத்திலிருந்து நான் ரெடி தான் என்னும் பெஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும்  பல மோசமான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்த பாடலில் 'பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க... பத்தவச்சு பொகையவுட்டா பவரு கிக்கு' உள்ளிட்ட சில வரிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பின.


பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும், 'நான் ரெடி' பாடலில் இடம்பெற்ற வரிகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அரசியல் பிரமுகர் ராஜேஸ்வரி ப்ரியா என்பவர், 'நான் ரெடி' பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சையான வரிகளை நீக்க வேண்டும் என சட்டப் போராட்டம் நடத்தினார். அதற்கு தற்போது நீதி கிடைத்துள்ளது. அதாவது 'நான் ரெடி' பாடலில் உள்ள சர்ச்சையான வரிகளை நீக்க, மத்திய சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.


அதேபோல், விஜய்யின் புகை பிடிக்கும் காட்சிகளையும் இந்தப் பாடலில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ராஜேஸ்வர் ப்ரியா, "நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது. தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. எனது புகாரை ஏற்று நான் எடுத்துக் கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும். உண்மை பணத்தைவிட வலிமையானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement