• May 06 2024

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விடுதலை படக்குழு- அப்போ வாடிவாசல் அப்டேட்டுக்கு இனிமேல் குறைவிருக்காது

stella / 1 year ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வந்த திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அத்தோடு இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.


சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு வழியாக  படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படப்பிடிப்பு குழுவினரின், புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கௌதமேனனும் இப்படத்தில் நடித்துள்ளார். சூரி போலீஸ் அதிகாரியாகவும், கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.'விடுதலை' படத்தின் முதல் பாகம் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் படக்குழு படமாக்கி முடித்துள்ளது.


 இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இளையராஜா இசையமைத்துள்ளார்.ஆர். எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை. ரெட் ஜெயின் மூவிஸ் வழங்குகிறது.


தற்போது வெற்றிமாறன் பல நாட்களாக படப்பிடிப்பில் இருந்த 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement