• May 05 2024

பத்துத் தல திரைப்படத்தின் ரிலீஸ் திகதியும் அறிவிச்சாச்சு- சிம்பு ரசிகர்களுக்கு தொடர்ந்து கிடைத்த குட் நியூஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளில் சிக்கி தற்பொழுது ரி என்ட் ரி கொடுத்து நடித்து வரும் முக்கிய நடிகர் தான் சிம்பு. இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இவர் தற்பொழுது தனது தகப்பனும் இயக்குநருமான டி. ராஜேந்திரனின் உடல் நிலை சரியில்லாததால் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே தன்னுடைய தந்தை குணமடைந்து வருவதாகவும் நேற்றைய தினம் குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வருகின்றார். இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கின்றார் இப்படமான செப்டெம்பர் மாதம் 15ம் திகதி வெளியாகும் என்று உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதே போல சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்துத் தல திரைப்படத்தின் ரிலீஸ் திகதியும் அறிவிச்சாச்சு. அதன் படி இப்படமானது டிசம்பர் மாதம் 14ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement