• May 07 2024

மறுபடியும் மாற்றப்பட்ட கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வைகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அத்தோடு இப்படத்தில் விக்ரம் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருனாளினி ரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை பான் இந்தியா படமாக தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு இப்படத்தின் க்ளைமாக்சை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டு, படக்குழு சென்றது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஷுட்டிங்கை நிறுத்தி விட்டு, படக்குழு இந்தியா திரும்பியது.தொடர்ந்து மீண்டும் 2020 டிசம்பர் மாதம் தான் படப்பிடிப்பு துவங்கி, 2021 ம் ஆண்டு மத்தியில் தான் முடிக்கப்பட்டது.

இந்த படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 25 கெட்அப்களில் நடிப்பதாக சொல்லப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.இதன் பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய விக்ரம் தன் மகன் துருவ் விக்ரம் உடன் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இப்போது ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 25 அல்லது செப்டம்பர் 8 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement