• May 04 2024

பிரசாந்தின் வெற்றிக்கு காரணம் வடிவேலு தான்…நம்ப முடியலயே…எதற்காக இப்படி சொல்லுறாங்க..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'வைகாசி பிறந்தாச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவரே நடிகர் பிரசாந்த். இவர் ஒரு வாரிசு நடிகரும் கூட. அதாவது நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகனே இவராவார். இவரது அறிமுகப் படமே பெரியளவில் ஹிட் ஆனதால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புக்கள் வந்து குவியத் தொடங்கின. இதன் காரணமாக அஜித், விஜய் ஆகிய நடிகர்களுடன் போட்டி போடக் கூடிய அளவிற்கு வளரத் தொடங்கினார்.

பிரசாந்தின் நடிப்பில் வெளியாகிய படங்களோ ஏராளம். அதில் 'ஜோடி', 'திருடா திருடா', 'பிரியாத வரம் வேண்டும்', 'பார்த்தேன் ரசித்தேன்', 'வண்ண வண்ண பூக்கள்' போன்ற படங்கள் இன்றும் நம் மனதில் இடம்பிடித்து நிற்கின்றன. அப்போதிருந்த சினிமா மார்க்கெட் பிரசாந்தின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

எனினும் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களின் காரணமாக பிரசாந்தால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் தொடர்ந்து இவர் நடித்த படங்கள் தோல்விப் படங்களாக மாற ஆரம்பித்தன. இதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்து சினிமாவில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதுமட்டுமல்லாது ரசிகர்களுக்கு பிரசாந்த் மேல் இருந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அதனால் சினிமாத் தயாரிப்பாளர்கள் பலரும் பிரசாந்தின் படத்தை தயாரிக்க தயங்கி நின்றனர். அதுமட்டுமில்லாமல் இதனைத் தொடர்ந்து பிரசாந்த்க்கும் சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் குறைந்ததாக பலராலும் அப்போது பேசப்பட்டது.

அதன் பின்னர் பிரசாந்த் தனது சக நடிகர்கள், மற்றும் நண்பர்களின் விழாக்களில் கலந்து கொள்வது, சினிமாவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, ஒரு சில பேட்டிகள் கொடுப்பது என சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக தலை காட்டத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்தும் ஒரு சில பட வாய்ப்புக்கள் வர அப்படங்களில் பிரசாந்த் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி அவருகின்றது. அதாவது இதுவரை பிரசாந்த் நடித்த படங்களில் எந்தப் படமும் அவருக்காக ஓடவில்லை எனவும் வடிவேலு காமெடிக்காக மட்டுமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பையும், வசூலையும் பெற்றது எனக் கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஆயுதம், வின்னர் மற்றும் லண்டன் போன்ற இவருடைய வெற்றிப் படங்கள் வடிவேலின் காமெடிக்காக மட்டுமே ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதாகக் கூறப்படுகின்றது. அப்போ இதுவரைக்கும் எந்த ஒரு படமும் பிரசாந்த்திற்காக வெற்றி பெறவில்லையா?, நம்ப கூடிய மாதிரியாங்க இது இருக்கு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement