• May 01 2024

முதன் முறையாக விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வந்த மீனா... வெளியானது ப்ரோமோ வீடியோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் தான் senior super singer-9 இடம்பெற்று முடிந்தது. இதனையடுத்து தற்போது சிறியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாகி இருக்கின்றது. 


இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சிக்கு முதன்முறையாக சிறப்பு விருந்தினராக நடிகை மீனா கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது அவருடன் இணைந்து பாடகர் மனோ மற்றும், ஸ்டீபன் சகாரியா ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.


அதில் சிறுமி ஒருவர் மீனாவிடம் இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமாறு கேட்கின்றார். மீனாவும் அவரைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement