• May 13 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஏற்பட்ட பிரச்சனை.. படத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பின் தன்னுடைய மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

கேமியோ ரோலில் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்திற்கு பூஜை போட்டுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், லால் சலாம் படத்திலிருந்து திடீரென அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா வெளியேறிவிட்டாராம். இதை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும், பூர்ணிமாவிற்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு தான் பூர்ணிமா இப்படத்தில் இருந்து வெளியேற காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பூர்ணிமாவிற்கு பதிலாக வேறு யார் லால் சலாம் படத்திற்காக ஆடை வடிவமைப்பாளராக கமிட்டாகவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ஏற்கனவே பரதேசி, பா. பாண்டி, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement