• Sep 21 2023

வளவனால் குணசேகரனுக்கு வந்த சிக்கல்... கரிகாலனையும், மனைவியையும் பிரிக்க சொன்ன ஜான்சிராணி... ஷாக்கில் ஆதிரை... சூடுபிடிக்கும் 'Ethirneechal' Episode..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அதில் குணசேகரன் வீட்டுக்கு வந்த கிள்ளிவளவன், ஜீவானந்தம் இங்க எங்கேயோ தான் சுத்திகிட்டு இருக்கான்னு கேள்விப்பட்டேன். ஏன் அவனை அரைகுறையா விடணும் அது தான் முழுசா முடிச்சிடலாம் என சொல்ல வந்தேன் எனக் கூறுகின்றார். அதற்கு கோபத்தில் கதிர் கிண்டலாக "ஆமாமா அப்படியே போய் பக்கத்து வீட்டுகாரனை சுடு" என்கிறார்.

இதனை தொடர்ந்து கதிருக்கும் வளவனுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகின்றது. உடனே குணசேகரன் அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றார். பின்னர் கிள்ளி வளவனிடம் "உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நான் செட்டில் செய்து விடுவேன். நீங்க சென்னைக்கு கிளம்புங்க" என்கிறார். 


பதிலுக்கு கிள்ளி வளவன் "இங்க பாரு குணசேகரா எது நடந்தாலும் நாம எல்லாரும் சேர்ந்து தான் அனுபவிக்கனும். என்னை மட்டும் நீங்க எல்லாரும் சேர்ந்து மாட்டிவிட நினைச்சா நான் எல்லாத்தையும் எங்க சொல்லணுமோ அங்க சொல்லிட்டு எஸ்கேப்பாகி போய்கிட்டே இருப்பேன்" எனக் கூறி மிரட்டுகின்றார்.

மறுபுறம் ஜீவானந்தம் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா "ஜீவானந்தம் வீட்டில் ஒரு சின்ன பிள்ளை இருக்கு எப்படி கைவீசிக்கிட்டு போறது. ஏதாவது வாங்கிட்டு போகலாம்" என யோசித்துவிட்டு பின்னர் பிஸ்கெட் வாங்குகிறார்கள். பின்னர் ஜனனியிடம் ஈஸ்வரி "எதுவும் அறியாத அந்த சின்னக் குழந்தை கஷ்டப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பாவத்தை செய்தவர்கள் நாலு சுவருக்குள் தைரியமாக உட்கார்ந்து கொண்டு மற்றவர்களை அதிகாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்" எனக் கூறிப் புலம்புகின்றார்.

இதனைத் தொடர்ந்து குணசேகரன் வீட்டுக்கு கரிகாலனுடன் வந்த ஜான்சிராணி "வெளியில இருந்து பார்க்க நல்லா இருக்கு உள்ள வந்து பார்த்த தானே ச்சீ என இருக்கு. எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இந்த மகாராணி என்னோட பையன் கூட வீட்டுக்கு வந்து வாழ போறாளா இல்லையா?" என ஆதிரையின் கதையை இழுக்கின்றார்.


பதிலுக்கு ஆதிரை "எந்த ஒரு மாற்றமும் இன்றி என்னால் வர முடியாது" என வீராப்புடன் கூறுகின்றார். அதற்கு ஜான்சிராணி "அப்போ சரி என்னோட உறவுக்காரங்கள   கூட்டிட்டு வந்து நடுவீட்ல வைச்சு பஞ்சாயத்து செய்து முடிவெடுக்கலாம். இது வரைக்கும் அமைதியா போயிட்டேன். என்னோட ஆட்டத்தை இனிமேல் தான் நீங்க எல்லாரும் பார்க்க போறீங்க. ஒன்னு வந்து வாழ சொல்லுங்க இல்லனா அறுத்துவிட்டுடுங்க. ஆனால் அறுத்துவிட்டா சேதாரம் கொஞ்சம் அதிகமா இருக்கும்" எனக் கூறுகின்றார்.

பதிலுக்கு குணசேகரன் "அதெல்லாம் அறுத்துவிட வேண்டாம் இவங்க ரெண்டு போரையும் மலைப்பிரதேசத்துக்கு ஹனிமூன் அனுப்பி வைக்குறேன். இரண்டு பெரும் வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும்" என சொல்கின்றார். உடனே ஜான்சிராணியும் சரி இந்த முறை நீ சொல்றதை நம்பி நான் போறேன் என குணசேகரனிடம் கூறி விட்டு போகின்றார். ஹனிமூன் கதையைக் கேட்டதும் ஆதிரை ஷாக் ஆகின்றார்.

மறுபுறம் ஜீவானந்தம் வீட்டிற்கு வந்த ஜனனியும் மற்றவர்களும் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டு அப்பத்தாவை அழைக்கிறார்கள். வெளியில் வந்து வெண்பா எட்டிப் பார்க்கின்றார். ஜனனியைக் கண்டதும் வெண்பா சிரித்து கொண்டே ஓடி வந்து தேங்க்ஸ் சொல்கிறாள். பதிலுக்கு ஜனனி ஏன் எனக் கேட்கின்றார். 


அதற்கு வெண்பா "எங்க அம்மா இறந்த அன்னைக்கு எங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தீங்க. நான் தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன்" என்கிறார். இதனைக் கேட்டதும் நந்தினி வெண்பாவை கட்டி அணைத்து அழுகின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement