• May 14 2024

வெளிநாட்டுத் தோழிகளுடன் விஜய்யின் மகள்... அதுவும் இப்படி ஒரு உடையில்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

படங்களில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்ற விஜய்க்கு திரையுலகைத் தாண்டி அழகான குடும்பம் ஒன்று இருக்கின்றது. அதாவது இவர் சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற ஒரு மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். 


இதில் ஜேசன் சஞ்சய் தனது தந்தை மூலமாக சினிமாவில் கால் பாதிக்க விரும்பாது குறும்படங்கள் எடுப்பதில் கவனத்தை செலுத்தி வருகின்றார். மகள் திவ்யா சாஷாக்கு சினிமாவில் ஈடுபாடு கிடையாது. இவர் பேட்மிட்டன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.


விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை போலவே அவரின் மகள் திவ்யா சஷாவும் கனடாவில் படித்து வருகின்றார். இந்நிலையில் திவ்யா தனது வெளிநாட்டு தோழிகளுடன் எடுத்துக்கொண்ட மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார்.


அதில் இவர் கொஞ்சம் கவர்ச்சியான மாடர்ன் உடையணிந்து இருக்கின்றார்.

அப்புகைப்படங்கள் தளபதி ரசிகர்கள் மூலமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement