• May 09 2024

நடிகர் சூரி வெளியிட்ட அந்த புகைப்படம்- பிரமிப்பில் ரசிகர்கள்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபல்யமானவர் என்பது தெரிந்ததே. அத்தோடு தற்பொழுதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

சினிமாத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துக்கொண்டிருந்த சூரிக்கு 2009 ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் அவரை காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்தார்.

அதற்க்கு முன் 10 வருடங்களாக பல படங்களிலும், சிரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரிக்கு வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

அவர் நடிப்பது காமெடியன் ரோல் தான் என்றாலும் உடலை ஹீரோவை போல பிட் ஆக வைத்திருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் சீமா ராஜா படத்தில் தனது சிக்ஸ் பேக் காட்டி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது ஃபிட் ஆன உடலை காட்டி சில புகைப்படங்களை சூரி வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பிரமித்து இருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement