• May 26 2026

அடிக்கிறவனுக்கு காரணம் தெரியாது… அடிவாங்குறவனே சொல்லணும்.! ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து

shali / 2 months ago

Advertisement

Listen News!

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பலரும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களில் இயக்குநர் அமீர் முக்கியமானவர். தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது பேசுபொருளாக இருக்கும் பல விஷயங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்தார். குறிப்பாக, ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்சனை தொடர்பாக அவர் கூறிய கருத்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


செய்தியாளர்கள், விஜய்யின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியபோது, அதை அமீர் வரவேற்றார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் மற்றும் சமூக கருத்துக்கள் குறித்து பலரும் விவாதித்து வரும் நிலையில், அவரது நிலைப்பாடு குறித்து அமீர் தனது அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

இதற்கு முன்பு, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக, மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து மற்றும் நடிகை திரிஷாவுடன் பொதுவெளியில் தோன்றிய விவகாரம் பற்றி அமீர் விமர்சனமாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த முறை அவர் பேசும் கருத்து மீது கூடுதல் கவனம் திரும்பியது.

முக்கியமாக, “ஜனநாயகன்” திரைப்படத்தின் சென்சார் பிரச்சனை குறித்து பேசும்போது, அமீர் கடுமையான கேள்விகளை எழுப்பினார். ஒரு திரைப்படம் தணிக்கை வாரியத்தால் பார்த்த பிறகு, அதற்கு சான்றிதழ் வழங்கவோ அல்லது மறுக்கவோ முடிவு எடுக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக தேர்தல் அதிகாரிகள் பார்க்க வேண்டும் என கூறி மீண்டும் தாமதப்படுத்துவது ஏன் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.


இதுகுறித்து அவர் கூறிய ஒரு கூற்று தற்போது வைரலாகியுள்ளது: “அடிக்கிறவன் ஏன் அடிக்கிறேன்னு கடைசி வரை சொல்லமாட்டான். ஆனால் அடிவாங்குறவன் நீ தான்… நீயாவது இதுக்குத்தான் என்னை அடிக்கிறாங்கன்னு சொல்லணும். நீயும் அமைதியாக இருந்தால், மத்தவங்களுக்கு உண்மை எப்படி தெரிய வரும்?” என்ற அவரது வாக்கியம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அமீரின் இந்த கருத்து, சென்சார் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது. ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பலரும் இதை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement