• May 05 2024

தமிழில் அடுத்த ஹீரோயின் ரெடி.. மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட தேவதர்ஷினி! எப்படி இருக்காங்க பாருங்க..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

சீரியல்கள் மற்றும் படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை தேவதர்ஷினி. இவர் நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.இவர்களுக்கு நியதி என்ற மகள் உள்ளார். இவர் 96 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தொடர்ந்து பிகில் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை, முக்கியமான தேர்வு இருந்ததால் நிராகரித்துள்ளார். தற்போது படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நியதியின் அடுத்தடுத்த போட்டோஷுட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தேவதர்ஷினியின் சாயலில் அப்படியே இருக்கும் நியதிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

முன்னதாக விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கவும் நியதிக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது மிகவும் முக்கியமான தேர்வு ஒன்றை எழுத வேண்டியிருந்ததால் அந்த வாய்ப்பை நியதியால் ஏற்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது ராணி என்ற மலையாளப்படத்தில் நியதி கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் வீடியோ பாடலையும் தேவதர்ஷினி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நியதியின் புதிய போட்டோஷுட் புகைப்படங்களையும் தேவதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிகவும் தனித்தன்மையுடன் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 96 படத்தில் நடித்த சுட்டிப் பெண்ணா இவர் என்று இந்தப் புகைப்படங்கள் கேள்வி கேட்க வைத்துள்ளது. இந்நிலையில்  விரைவில் இவர் தமிழிலும் ஒரு வலம்வருவார் என்று எதிர்பார்க்கலாம்.


Advertisement

Advertisement

Advertisement