• May 05 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து மீண்டும் வெளியாகிய புதிய லுக் போஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மிகப் பிரமாண்ட பொருட் செலவில் இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் செம்டெம்பர் 30ம் திகதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.அத்தோடு இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகின்றது.

 இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 


தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ரஹ்மான் நடிக்கும் மதுராந்தகன் கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டருடன் சுந்தர சோழர் மற்றும் செம்பியன் மாதேவி கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.மதுராந்தகன் கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் புதினத்தில் நந்தினி கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக எதிர்மறை தன்மை கொண்டது என்பதும்  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement