• Jan 19 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வெளுத்து வாங்கிய பக்கத்துவீட்டு பெண்மணி! போயஸ் கார்டன் முன் போர்க்கொடி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படுபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு என்றே உலகளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இன்றைய தினம் கொண்டாடப்படும் தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரஜினிகாந்த தனது ரசிகர்களுக்கு வாழ்த்துச் சொல்லியுள்ளார்.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு ரஜினியை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதனால் ஆத்திரமான பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர், ரஜினி இல்லம் முன் போர்க்கொடி தூக்கியது வைரலாகி வருகிறது.


 ரஜினியிடம் பொங்கல் வாழ்த்துப் பெற வேண்டும் என நூற்றுக்கணக்கான ரசிகர்கள் போயஸ் கார்டன் ஏரியாவில் குவிந்தனர். இதனையடுத்து ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், "அனைவரும் ஆரோக்கியம், மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் சிந்தனையிலும் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்" என வாழ்த்துத் தெரிவித்தார். 

இதனிடையே ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர், ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் கடும் ஆத்திரம் அடைந்தார். ரஜினியின் இல்லம் முன்பு சென்ற அவர், "நாங்களும் தான் டேக்ஸ் கட்டுறோம்... இதே ஏரியாவில் காலங்காலமாக குடியிருக்கோம்... எங்களுக்கெல்லாம் எந்த ஸ்பெஷலும் கிடையாது. இங்களுக்கு மட்டும் என்ன இருக்கு... ஒவ்வொரு முறையும் இப்படி ரசிகர்கள் இங்க வருவது எங்களுக்கு தொல்லையா இருக்கு... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா.." என அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து ஆவேசம் ஆனார்.

தற்போது குறித்த சம்பவம் வைரலாகி வருகின்றது.

 

Advertisement

Advertisement