• May 06 2024

CWC இல் மைம் கோபி பெற்றுக் கொண்ட பணம் இத்தனை லட்சமா..? அப்போ 2-ஆம் இடத்தைப் பிடித்த ஸ்ருஷ்டிக்கு எவ்வளவு..?

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி செம ஜாலியாக சென்றது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசனில் யார் வெல்லப்போவது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.


அந்தவகையில் மைம் கோபி, ரண், சிவாங்கி , ஸ்ருஷ்டி, விசித்திரா, கிமற்றும் ஆண்ட்ரியன் என ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.

இந்த சீசனில் டைட்டிலை வின் பண்ணியது யார் என்பது குறித்த தகவல் ஏற்கெனவே இணையத்தில் கசிந்துள்ளது. அந்தவகையில் குக்வித் கோமாளி ஷோவில் கடந்த 3சீசன்களிலும் இல்லாத அளவிற்கு முதன்முறையாக ஆண் போட்டியாளர் ஒருவர் டைட்டிலை வென்றுள்ளார்.


அதாவது மைம் கோபி தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகவும், இதனையடுத்து இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டியும், மூன்றாவது இடத்தை விசித்திராவும் பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.


இதனையடுத்து தற்போது இவர்கள் பெற்றுக் கொண்ட பரிசுத் தொகை குறித்த தகவலும் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் டைட்டில் வின்னர் ஆகிய மைம் கோபிக்கு ரூ. 10 லட்சமும், இரண்டாம் இடத்தை பிடித்த ஸ்ருஷ்டிக்கு ரூ. 5 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement