பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது பாதி நாட்களை கடந்து உள்ளது.
இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
d_i_a
இதை தொடர்ந்து ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். எனினும் இவர்களுள் இதுவரையில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, சிவகுமார் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் டேஞ்சர் சோனில் உள்ள போட்டியாளர்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதிலும் மூன்று பெண் போட்டியாளர்கள் சிக்கி உள்ளார்கள்.
அதன்படி, சச்சனா, தர்ஷிகா மற்றும் ஆனந்தி ஆகியோர் டேஞ்சர் சோனில் சிக்கி உள்ளனர். இவர்களுள் யார் வெளியே போவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
எனினும் விஜய் சேதுபதி ஒவ்வொரு வாரமும் சச்சனாவை காப்பாற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த வாரம் என்ன நடக்கும்? யார் வெளியேறுவார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
Listen News!