• May 18 2024

இரண்டு வருடங்களாக சைட் அடித்த ப்ரியா... கண்டுக்காத அந்த நபர்.. வெளியான நீண்டநாள் ரகசியம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவராக இருந்து பின் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற ஒரே சீரியலில் நடித்து மக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். 

இதன்பின்னர் சினிமாவில் மோகம் கொண்ட ப்ரியா பவானி சங்கர் 'மேயாத மான்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.


இருப்பினும் சமீபத்தில் தன் ஆசை காதலனுடன் வெளிநாட்டில் இருந்து இரு மாதங்களாக ஊர் சுற்றி புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி சங்கர் தற்போது படங்களில் சிறு ரோல் மட்டுமே கிடைத்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது இனிமேல் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.

இந்நிலையில் தன்னுடைய நீண்டநாள் முக்கிய ரகசியம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார் ப்ரியா பவானி. அதாவது ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைக்கும் பழக்கம் தினமும் இருப்பதால் அடிக்கடி ஜிம் சென்று வருவார்.


அப்படி ஜிம்மிற்கு செல்லும் போது 2 வருடங்களாக ஒரு பையன் மட்டும் தன்னை கண்டுகொள்ளாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து சென்று விடுவாராம். அப்படி இருந்த அந்த நபரை ப்ரியா பவானி சைட் அடித்தபடி இருந்தாரம். ஆனால் அப்போது கூட அந்த பையன் எதுவும் பேசாமல் செல்வாராம்.

அத்தோடு ஒரு நடிகை என்று கூட தெரிந்தும் மரியாதை கொடுத்த அந்த நபரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி.


மேலும் இப்படிப்பட்ட நபர் தான் எனக்கு பிடிக்கும் என்றும் பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கும் பையன்களைவிட சொந்த உழைப்பில் பைக் வாங்கி வைத்திருக்கும் பையன்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

Advertisement

Advertisement