• Jun 27 2024

ஜிபி முத்து ஒண்ணும் தாமரை மாதிரி இல்லை... தனலட்சுமியை வெளுத்து வாங்கிய வனிதா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.


இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில், அதில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக இருப்பவர் தனலட்சுமி. இவரிற்கும் சக போட்டியாளரான ஜிபி முத்துவிற்கும் இடையில் சில சில கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது. அதாவது இவர் ஜிபி முத்துவை நடிக்காதீங்க என்று சொன்னதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. 


அந்நிகழ்ச்சியில் ஜாலியாக சிரித்து ஆடிப்பாடிக்கொண்டிருந்த ஜிபி முத்து நான் நடிக்கவில்லை எனக் கூறி அழுதார். இதையடுத்து அனைவரும் ஜிபி முத்துவை சமாதானம் செய்தனர். ஜிபிமுத்து கண்ணீர் விட்டதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் தனலட்சுமியை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் நேற்றைய எபிசோடில், ஜிபி முத்துவிடம் தனலட்சுமி சண்டை போட்டது குறித்து பேசிய வெஷல் கிளீனிங் டீம் லீடரான ஜனனி "பெரியவர்கள் வயதானவர்கள் அனைவரும் இந்த வீட்டில் இருக்கிறார்கள்.

இதில் வயதில் பெரியவர்கள் வா.. போ என்று பேசுவது தப்பான விஷயம் இல்லை. இதை பற்றி பெரிதாக நாம் எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. இது ஒன்றும் ரீல்ஸ் இல்லை இதனால், தனலட்சுமியை ஸ்வாப் செய்கிறேன்" எனக் கூறியிருந்தார் ஜனனி.


ஜனனியின் பேச்சால் கடுப்பான தனலட்சுமி,மற்ற போட்டியாளர்களிடம் ரீல்ஸ் போடுவதைப் பற்றி ஜனனி ஏன் பேசவேண்டும் என அழுது பஞ்சாயத்தை கூட்டினார். இதையடுத்து, ஆயிஷா, விக்ரம் என அனைவரும் ரீல்ஸ் பற்றி நீங்கள் எப்படி தவறுதலாக பேசலாம் என ஜனனியிடம் சண்டைக்கு நிற்க ஜனனி என்ன சொல்வது என்று தெரியாமல் திக்கித் திணறினார்.

இந்நிலையில் நேற்யை நிகழ்ச்சி குறித்து ரிவ்யூ கொடுத்த வனிதா விஜயகுமார் "ஜிபி முத்துக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் அதுவே மிகப்பெரிய விஷயம்.

அது மட்டுமில்லாமல் ஜிபி முத்து காமெடியனாக மட்டும் இல்லை, புத்திசாலியாகவும் இருக்கிறார். தாமரை மாதிரி எனக்கு ஒன்னும் தெரியாது, தெரியாதுனு சொல்லாமல் தெளிவாக இருக்கிறார்" எனக் கூறியிருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது "தனலட்சுமி குறித்து ஜனனி ரொம்ப தெளிவாக பேசியிருந்தார். அவள் பேசிய விதம் எனக்கு பிடித்து இருந்தது. இது ரீல் இல்லை பிக்பாஸ் வீடு என்று சொன்னதில் எந்தவிதமான தப்பும் இல்லை, நானா இருந்தாலும் அப்படித்தான் பேசியிருப்பேன்.

இந்த விஷயத்திற்கு போய் தனலட்சுமி இவ்வளவு கலாட்டா பண்றது, அழுவது எல்லாமே நாடகம். ரீல்ஸ் வார்த்தை யூஸ் பண்ணது தப்பான விஷயமே இல்லை" எனவும் வனிதா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement