• May 19 2024

துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்ற அஜித்- AK61 திரைப்படத்திலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியினைப் பெறா விட்டாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச். வினோத் மற்றும் போனிகபூர் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்திற்கு தற்சமயம் AK61 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. AK61 திரைப்படத்தில் அஜித்தின் கெட்டப் செம வைரலாகியதோடு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.

அந்த கெட்டப்பிலட தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு அஜித் சென்றுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement