• May 05 2024

நாளை மறுதினம் ரிலீஸாகவுள்ள 'தி கேரளா ஸ்டோரி'... தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது... உளவுத்துறை திடீர் எச்சரிக்கை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சுதிப்தோ சென் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தை விபுல் அம்ருத்லால் ஷா என்பவர் தயாரிக்கின்றார். இந்தியில் உருவாகியுள்ள இப்படத்தில் யோகிதா பிஹானி , சோனியா பாலானி, அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா, மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


இந்நிலையில் இந்த படமானது நாளை மறுதினம் தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. ஆனால் இதற்குப் பல எதிரான கருத்துக்களும் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. அதாவது இப்படத்தினுடைய ட்ரெய்லரில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டு இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவதாக எடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்த படத்தின் போஸ்டர் முன்னதாக கடந்தாண்டு வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது, இதற்கு கேரள அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர்  வகுப்பு பிரிவினை வாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். 


அதுமட்டுமல்லாது இப்படத்தை வெளியிடக்கூடாது  என பலரும் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்றைய தினம் இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இவ்வாறான பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)  நேற்று நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படம் வெளியானால் கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்பதால் உளவுத்துறை இப்படையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement