• Sep 10 2024

விஜயசாந்தி பட டைட்டிலில் வனிதா விஜயகுமார்.. எதிர்பாராத ட்விஸ்ட்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் ’வைஜெயந்தி ஐபிஎஸ்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவித்து லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி டைட்டிலில் நடிப்பது தனக்கு பெருமை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இந்த படத்தின் ஆரம்ப விழா குறித்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த 1990 ஆம் ஆண்டு ’வைஜெயந்தி ஐபிஎஸ்’ என்ற திரைப்படத்தில் விஜயசாந்தி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும் இந்த படம் வெறும் 90 லட்சத்தில் தயாராகி 7 கோடி வரை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் விஜய் சாந்திக்கு தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ’வைஜெயந்தி ஐபிஎஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் வனிதாவுக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது எதிர்பாராத ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. விஜயசாந்தி   நடித்தது போலவே ஒரு ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள வரும் நிலையில் வைரல் ஸ்டார் என்ற பட்டத்திற்கும் நீங்கள் பொருத்தமானவர் என்று பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement