• Apr 02 2025

'லால் சலாம்' பட ரிலீஸுக்கு அதிரடியாக தடை விதித்த அரசு? கடும் அப்செட்டில் ரஜினி ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்தப் படம் உலக அளவில் 700 கோடி ரூபாய் வரை வசூலித்து சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, தனது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க  கமிட்டானார் ரஜினிகாந்த்.

லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய  நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

லால் சலாம் படமானது பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக  உள்ளது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா, எனது தந்தையை சங்கி என்று சொல்கிறார்கள் ஆனால் அவர் சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் லால் சலாம் படத்துக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, இந்த படத்தை ரிலீஸ் செய்ய குவைத் அரசு தடை விதித்திருப்பதாகவும், இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும் இதில் இந்து - முஸ்லிம் மதப் பிரச்சினை பிரதானமாக இருக்கலாம் என கருதி இந்த முடிவை அந்த நாட்டு அரசு எடுத்துள்ளதாக  கூறப்படுகிறது.

Advertisement

Advertisement