• Jan 19 2025

ஒருவழியா முடிவுக்கு வந்த ராஜி பிரச்சனை! போட்டோவை பார்த்து ஷாக்கான பாக்கியா? இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ராஜி ரூமில் தனியாக இருக்க அவருக்கு பாதுகாப்பாக பாக்கியாவும் செல்வியும் வந்து அவருடன் தூங்குகிறார்கள்.

ராஜி தூக்கம் வராமல் வெளியே செல்ல முயல, பாக்கியா  அவருக்கு அறிவுரை கூறி தூங்க வைக்கிறார்.

அடுத்த நாள் பாக்கியா மினிஸ்டரை சந்திக்கப் செல்ல, அந்த பொண்ணுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு செல்விக்கும், அமிர்தாவுக்கும் கூறிவிட்டுப் போகிறார்.

இன்னொரு பக்கம், கோமதி, மீனா, கதிர் ஆகியோர் வீட்டுக்கு செல்வதற்காக ஹோட்டலில் இருந்து எல்லாத்தையும் எடுத்து வைத்து தயாராகிறார்கள்.

இதை அடுத்து கோமதி, மீனா, கதிர் ஆகியோர் புறப்பட்டு பாக்கியாவுக்கு சொல்வதற்காக அவரது ரூமுக்கு சென்று கதவை தட்ட எழில் கதவை திறக்கிறார். அந்த ரூமில் ராஜி தூங்கிக் கொண்டிருக்க, எனினும் அவரைப் பார்க்காமல் சொல்கிறார்கள்.


பாக்கியா மினிஸ்டரை சந்திக்கச் சென்ற இடத்தில், அங்கு பாக்கியாவை புகழ்ந்து தள்ளுகிறார் மினிஸ்டர். பாக்கியாவும் அவருக்கு நன்றி சொல்லி செல்கிறார்.

அதன் பிறகு பாக்கியா அங்கிருந்து ஹோட்டலுக்கு வர, கோமதியும் ஹோட்டலை விட்டு வெளியே வர இருவரும் சந்திக்கிறார்கள்.

அந்த நேரத்தில் கதிருக்கு ராஜின் போட்டோவை அனுப்புமாறு ஒருவர் கால் பண்ண, மீனா சோசியல் மீடியாவில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து அனுப்ப, அந்த போட்டோவை கோமதி பாக்கியாவுக்கு காட்ட அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இதை தொடர்ந்து மூவரையும் ரூமுக்கு வருமாறு பாக்கியா அவசரமாக அழைத்துச் செல்கிறார்.


மூவரும்  கடும் குழப்பத்தில் செல்ல, பாக்கியா ரூமில் வைத்து ராஜி, நாங்க இருந்த ரூமுக்கு பக்கத்துல தான் இருந்தா என்று அனைத்து உண்மைகளையும் சொல்கிறார்.

இதை அடுத்து கோமதி, ராஜி ரூமுக்கு செல்ல, ராஜி அங்கே இல்லை. அவர் செல்வி அக்கா, அமிர்தாவுடன் கோயிலுக்கு சென்றதாக எழில் சொல்ல, எல்லாரும் கிளம்பி கோயிலுக்கு செல்கிறார்கள்.

கோயிலுக்கு சென்ற கோமதி, அங்கு ராஜியை பார்க்க இருவரும் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

இறுதியில் ராஜி, கண்ணனை நம்பி வந்து ஏமார்ந்த கதையை சொல்ல, கோமதி திட்டுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement