• May 12 2024

குணசேகரன் இல்லாமல் வந்த முதலாவது 'எதிர்நீச்சல்' ப்ரோமோ வீடியோ... வீடே வெறிச்சோடிப்போய் இருக்கே... கண் கலங்கி அழும் ரசிகர்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதுவும் குறிப்பாக ஆதி குணசேகரன் இல்லாமல் முதன் முறையாக இந்தப் ப்ரோமோ வந்துள்ளது.


அதில் ஞானம் ரேணுகாவிடம் "ஐஷு எங்க" எனக் கேட்டு மிரட்டுகின்றார். அதற்கு ரேணுகா பேசாமல் நிற்க உன்னைத்தான் கேட்கிறேன் எனக்கூறித் திட்டுகின்றார். 


பதிலுக்கு கரிகாலன் "என்ன பேசாமல் நிக்கிறீங், கையை சொரியிறீங்க, முழியைப் பாருங்க முழியைப் பாருங்க, முழியே சரி இல்ல" எனக்கூறி ஞானத்திற்கு ஏத்தி விடுகின்றார்.


அதற்கு ரேணுகா "உங்களுக்கு பயந்து பயந்திட்டு எல்லாம் இனிமேல் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது, காலம் பூராவும் உங்க அண்ணனுக்கு கூஜா தூக்கிற எண்டு முடிவு பண்ணிட்டீங்களா, அந்த வேலையை மட்டும் பாருங்க" எனக்கூறி ஞானத்தை எதிர்த்துப் பேசுகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இந்த ப்ரோமோவில் வழமை போன்று வீட்டில் உள்ள அனைவரும் உள்ளனர். ஆனால் குணசேகரன் மட்டும் இல்லை. இதனைப் பார்த்த ரசிகர்கள் கண் கலங்கி உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement