• Sep 26 2023

ஷகிலாவைத் தொடர்ந்து தமிழ் Bigg Boss-7 இல் இருந்து விலகிய மற்றுமோர் நடிகை... ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமி‌ழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் விபரமும் அவ்வப்போது கசிந்த வண்ணம் தான் இருக்கின்றது.


அந்த வகையில் நடிகை ரேகா நாயரும் அவருடன் இணைந்து பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனும் கலந்து கொள்ளவிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இரவின் நிழல் பட பிரச்சனையால் ரேகா நாயரும், பயில்வான் ரங்கநாதனும் பப்ளிக் பிளேஸில் பயங்கர சண்டை போட்டிருந்தமை நம் அனைவருக்கும் தெரியும். எனவே இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் எனப் பலரும் கூறி வந்திருந்தனர்.


இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மற்றுமோர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரேகா நாயர் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. ஏற்கெனவே கவர்ச்சி நடிகை ஷகிலா கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். இப்போ ரேகா நாயரும் இல்லை என்ற இந்த விடயமானது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதனையடுத்து பயில்வானும் வருவாரா இல்லையா..? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement