• May 10 2024

'சரிகமப' மேடையில் பாவாடை, தாவணியில் மீண்டும் தோன்றிய அசானி... இந்த வாரம் என்ன பாடல்..? வெளியானது ப்ரோமோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் டிவியில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. இதில் பல சிறுவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசானி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டு தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார். இவர் பணம் இல்லாமையினால் தான் இந்தப் போட்டியில் தாமதமாக கலந்து கொண்டுள்ளார்.


இவரின் ஏழ்மையைப் புரிந்து கொண்ட டிவி சேனல் இவருக்கு 2வாரங்கள் அந்நிகழ்ச்சியில் பாட வாய்ப்பளித்திருந்தனர். பின்னர் அந்த 2வாரங்கள் கடந்து விட்ட நிலையில் போட்டியாளர்களில் ஒருவராக அசானியையும் தேர்வு செய்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் Drama&Performance Round இடம்பெறுகின்றது. சிறுவர், சிறுமிகள் ஆக்சன் கொடுத்துப் பாட்டுப்பாடி ஆடுகின்றனர். அந்தவகையில் நம்ம அசானியும் பாவாடை, தாவணியில் அழகாக தோன்றி இருக்கின்றார். 


கடந்த வாரம் அசானி பாடிய வீடியோ வெளியாகாமையினால் ஜீ தமிழ் போட்டியிலிருந்து அசானியை  வெளியேற்றி விட்டார்கள் என பல விமர்சனங்களும் வெளியாகி இருந்தன. இதனையடுத்து இந்த வார ப்ரோமோவில் அசானியை பார்த்தமை ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அந்தவகையில் இந்த வாரம் நம்ம அசானி என்ன பாடல் பாடப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    

Advertisement

Advertisement

Advertisement