• Oct 09 2024

ஜெயிலர் முதல் பாதியே 100 நாட்கள் ஓடும்.. ட்வீட் போட்டு ரணகளம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்று பிரமாண்டமாக எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.

ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 900 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்தனை திதிரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும்.உலகம் முழுவதும் 4ஆயிரம் திரைகளில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

காலையிலிருந்தே படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்த சூழலில் நெகட்டிவ் விமர்சனங்களும் ஆங்காங்கே வந்துகொண்டுதான் இருக்கின்றன. முதல் பாதி ரொம்பவே ஸ்லோவாக செல்கிறது. டார்க் காமெடி என்கிற பெயரில் நெல்சன் திலீப்குமார் எதையோ செய்திருக்கிறார். தெலுங்கு பட வாடை எல்லாம் அடிக்கிறது என ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு பரப்புகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்தச் சூழலில் சமீப காலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார். 

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மாறன், "ஜெயிலரின் முதல் விமர்சனம் வெளியானது. முதல் பாதி 100 நாட்கள். இரண்டாம் பாதி 500 நாட்கள். என்ன ஒரு கணிப்பு. என்ன ஒரு எண்ட்டெர்டெயினர். இதுதான் 70ஸ் கிட் என்பது" என குறிப்பிட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் முதலில் படம் பார்த்துவிட்டீர்களா. படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் வையுங்கள். பார்க்காமலேயே எப்படி நீங்கள் விமர்சனம் வைக்கலாம் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

முன்னதாக, ரஜினியை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துவருவதால் அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கணும் என ரஜினி ரசிகர்கள் நேற்று பேசியிருந்தனர். அதனையடுத்து மாறன் காவல் துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement