• May 08 2024

படம் வெளியாகிய முதல் நாளிலேயே வசூலில் மாஸ்காட்டிய Jawan திரைப்படம்- இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில், அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் வெளியான திரைப்படம் தான் ஜவான்.ஜவான் படத்தின் மூலம் நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரையும் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் அட்லி.

இப்படம் வெளியாகி ஒருபக்கம் பாசிட்டிவ் விமர்சனம் அதிகம் எழுந்தாலும்  நெகட்டிவ் விமர்சனமும் பேசப்பட்டு வருகின்றது. ஒரு சீன்கூட புதிதாக இல்லை. படம் ரொம்பவே நீளமாக செல்கிறது. பல இடங்களில் லேக் ஆகியிருக்கிறது என தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துவருகின்றன. 


இந்நிலையில் ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஹிந்தியில் மட்டும் அந்தப் படம் 60லிருந்து 65 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் அனைத்து மொழிகளையும் சேர்த்து மொத்தமாக இந்தியாவில் 80 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும்; உலக அளவில் 150 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைப் பார்த்த ஷாருக்கானின் ரசிகர்கள் இந்தியாவில் எப்போதும் தான் மட்டுமே வசூல் கிங் என்பதை இதன் மூலம் ஷாருக் உறுதிப்படுத்தியிருக்கிறார் என கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement