• May 05 2024

படம் ரொம்ப மோசமாக இருக்கிறது... 'பொன்னியின் செல்வன் 2' முதல் விமர்சனத்தை முன்வைத்த பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி, கல்கி புனையப்பட்ட நாவலாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.


இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தை பார்த்துவிட்டதாக கூறிய வெளிநாட்டு சென்சார் குழு உறுப்பினரும், பிரபல திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் 'பொன்னியின் செல்வன் கண்டிப்பாக படுதோல்வியடையும்' என்று கூறியுள்ளார். 


இருப்பினும் இதுவரை வெளிநாட்டு சென்சார் குழுவிடம் பொன்னியின் செல்வன் படம் போகவில்லை என்றும், அதற்குள் எப்படி இவர் மட்டும் படம் பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது சமீபகாலமாக தொடர்ந்து திரை பிரபலங்கள் மீதும், படங்கள் குறித்தும் மோசமான விமர்சனம் தெரிவித்து வரும் உமைர் சந்து மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோபத்தில் கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement