• May 09 2024

விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘கஞ்சா பூ கண்ணாலே’என்ற பாடலை ரிலீஸ் செய்த படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

அத்தோடு இன்றைய தினம் இவர் தனது 45 வது பிறந்த நாளைக் கொண்டாடுவதால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விருமன். இப்படத்தில் கதாநாயகியாக இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி நடித்திருக்கின்றார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘கஞ்சா பூ கண்ணாலே’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது யுவன் சங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடலை மணிமாறன் என்பவர் எழுதியுள்ளார்

இந்த படத்தில் சூரி ராஜ்கிரண் பிரகாஷ்ராஜ் பாரதிராஜா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement