• May 18 2024

'ஆதிபுருஷ்' நாயகனுக்கு அசத்தலாக சப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்... ஓ பிறந்தநாள் பரிசா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியத் திரையுலகில் மக்கள் மனம் கவர்ந்த நாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் 'ராதே ஷ்யாம்' படத்தைத் தொடர்ந்து 'சலார்', ப்ராஜக்ட் கே' படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். 


அதாவது ராமாயணத்தை பின்னணியாக வைத்து 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் அம்சமாக நடித்துள்ளார். கிருத்தி சனோன் சீதையாகவும், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணன் கேரக்டரிலும் நடித்துள்ளனர். 

மேலும் அக்டோபர் 2-ஆம் தேதி ஆதிபுருஷ் டீசரை படக்குழு வெளியிட்டது. ஆதிபுருஷ் டீசர் வெளியான நாள் முதலே பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டது. குறிப்பாக மேக்கிங், கிராஃபிக்ஸ், ராவணனாக சைஃப் அலிகான் என பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.


இந்நிலையில் இன்றைய தினம் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபாஸுக்கு, ஆதிபுருஷ் டீம் அசத்தலாக வாழ்த்து தெரிவித்துள்ளது. அதாவது சப்ரைஸ்ஸாக ஆதிபுருஷ் படத்தில் இருந்து பிரபாஸின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழுவினர் அதில் ரிலீஸ் தேதியையும் உறுதி செய்துள்ளனர். 

ராமர் அவதாரம் எடுத்துவரும் பிரபாஸின் இந்த போஸ்டரில், ஆதிபுருஷ் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு இந்தப் படம் 3 டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் அந்த போஸ்டரில் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில் அச்சு அசல் ராமராகவே தோற்றமளிக்கின்றார். 

இந்நிலையில் ரசிகர்கள் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement